மாநகராட்சி பம்ப் ஆபரேட்டர்கள் அதிகாரியிடம் முறையீடு


மாநகராட்சி பம்ப் ஆபரேட்டர்கள் அதிகாரியிடம் முறையீடு
x

நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி மாநகராட்சி பம்ப் ஆபரேட்டர்கள் அதிகாரியிடம் முறையீடு செய்தனர்.

வேலூர்

பம்ப் ஆபரேட்டர்கள்

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணியை வால்வு ஆபரேட்டர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் பணியாற்றக்கூடிய 44 பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் குடிநீர் வழங்கல் ஒப்பந்த பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று 2-வது மண்டல அலுவலகத்துக்கு திரண்டு வந்து உதவி பொறியாளர் ஆறுமுகத்திடம் முறையிட்டனர்.

ஊதியம் வழங்க வில்லை

அப்போது அவர்கள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் எங்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்த வருமானம் எங்களுக்கு போதுமானதாக இல்லை. இந்தநிலையில் மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு 3 மாதம் சம்பளம் தராமல் உள்ளனர். மேலும் 5 மாதம் பி.எப். பணமும் செலுத்தவில்லை.

இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஊதியம் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story