ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்


ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்
x

ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என ஏர் உழவர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்

ஏர் உழவர் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இதற்கு தலைவர் சுபா இளவரசன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் பாக்யராஜ், மாநில துணைத்தலைவர் தங்கத்தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மருத்துவ கல்வியை தமிழில் பயில திட்டமிட்டுள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மொழிகளை கற்பதை அனுமதிக்க வேண்டும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் கல்வியை கட்டாயமாகவும், அரசு செயல்பாட்டின் மொழியாக இருமொழியை தவிர்த்து தமிழ் மொழியை அரசு முறையாக அறிவிக்க வேண்டும், தமிழக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story