10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு விண்ணப்பம்


10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு விண்ணப்பம்
x

10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு விண்ணப்பத்தை கிராம மக்களிடம் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

மதுரை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்திற்கு நேற்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். அங்குள்ள கிராமபொதுமக்கள் சீனி, சுப்பையா, முருகானந்தம், கனி என்ற முத்துசாமி, ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று 2023-24-வது கல்வி ஆண்டிலாவது நியாமான கோரிக்கையான 10.5 சதவிகித வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே 31-ந் தேதிக்குள் நிறைவேற்றி சமூகநீதியை நிலைநாட்டகோரும் விண்ணப்பத்தை முதல்-அமைச்சருக்கு அனுப்பகோரி அதனை விளக்கி நேரில் வழங்கினார். அந்த விண்ணப்பத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வன்னியர்கள் வாழ்ந்து வருகின்றனர். 1987-ம் ஆண்டு மருத்துவர் அய்யா தலைமையில் நடந்த சமூகநீதி போராட்டத்தில் 21 உயிர்களை தியாகம் செய்து லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்று பெற்றதுதான் மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் எம்.பி.சி. 20 சதவீத இடஒதுக்கீடு. இதில் உயிர்தியாகம் செய்த வன்னியர்களுக்கு கிடைப்பது 3 முதல் 4 சதவீதம் மட்டும் தான். 2020-21-ல் மீண்டும் போராடிப்பெற்றது 10.5 சதவீத வன்னியர் உள்ஒதுக்கீடு ஆகும். அதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது. தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் உரிமையை வழங்க காலதாமதம் செய்வது எந்தவகையில் நியாயம். கடந்த கல்வி ஆண்டில் வன்னியர் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. எனவே இந்த கல்வியாண்டில் இடஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே 31-ந்தேதிக்குள் நிறைவேற்றி சமூகநீதியை நிலைநாட்டவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story