மக்கள் நேர்காணல் முகாமிற்கு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி


மக்கள் நேர்காணல் முகாமிற்கு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் தாலுகா சித்தாடியில் மக்கள் நேர்காணல் முகாமிற்கு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் தாலுகாவை சேர்ந்த சித்தாடி, ஆடிப்புலியூர், செருக்களத்தூர் ஆகிய வருவாய் கிராம பொதுமக்களின் வசதிக்காக மக்கள் நேர்காணல் முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடக்கிறது. இதனையொட்டி அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறும் ஒரு மாதத்திற்கு சம்பந்தப்பட்ட வருவாய் கிராம மக்களிடம் தங்கள் பகுதியின் குறைகள் குறித்த மனுக்களை பெற்று முகாம் நடைபெறும் அன்று அதற்குரிய தீர்வை மாவட்ட கலெக்டர் எடுக்க வேண்டும். இந்த நிலையில் சித்தாடி, ஆடிப்புலியூர், செருக்களத்தூர் மக்களின் கோரிக்கை மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி இன்று(வியாழக்கிழமை) சித்தாடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட கலெக்டர் லதா முன்னிலையில் நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட வருவாய் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்தும், தனிப்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் இன்று மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என குடவாசல் தாசில்தார் தேவகி கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story