மின் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மின் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்ற இரண்டாவது உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இந்த பதவிக்கு பதிவு பெற்ற அரசு சாரா நிறுவனம் அல்லது நுகர்வோர் அமைப்பு அல்லது முனைந்து செயல்படும் ஒரு நுகர்வோர் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை சிவகங்கை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை வருகிற 8-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story