ரேஷன் கடைகளில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


ரேஷன் கடைகளில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்ட இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்ட இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் ஜினு வௌயிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

காலி பணியிடங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 91, விற்பனையாளர்கள் மற்றும் 12 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.

இதற்கு http://www.drbsvg.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற நவம்பர் 14-ந்தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்ப கட்டணம் செலுத்தி செல்லான்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடர்பு கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.drbsvg22@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவோ அல்லது 70942 55260 செல்போன் எண்ணிலோ மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தில் அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story