5 ஆண்டு கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்


5 ஆண்டு கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
x

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளாா்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளாா்.இது குறித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நுழைவுத்தேர்வு

திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., பிஎட் உட்பட 7 ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளும், எம்.எஸ்சி கணிதம், எம்.எஸ்சி வேதியியல், எம்.எஸ்சி இயற்பியல், எம்.ஏ. பொருளாதாரம் உட்பட 23 முதுகலை பட்டப் படிப்புகளும், 28 பி.எச்டி படிப்புகளும் உள்ளன. மத்திய பல்கலைக்கழகத்தில் சேர மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை நடத்தக்கூடிய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியானது.

5 வருட படிப்புகள்

இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் https://cutncuet.samarth.edu.in/ என்ற இணையதளத்தில் 5 வருட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதன்படிஎம். எஸ்சி. இயற்பியல், எம். எஸ் சி வேதியல், எம். எஸ்சி கணிதம், எம். எஸ்சி பயோடெக்னாலஜி, எம்.ஏ. பொருளாதாரம், மற்றும் பி.எஸ்சி (ஜவுளி மற்றும் ஆடைகள்), பி.எஸ்சி (ஜவுளி தொழில்நுட்பம்), பி.பி.ஏ. (ஜவுளி வணிக பகுப்பாய்வு) ஆகிய படிப்புகளுக்கு வருகிற 23- ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.


Next Story