விமானபடை பணிக்கு விண்ணப்பிக்கலாம்


விமானபடை பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x

விமானபடை பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப் படையின் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் விமானபடை பணிக்கான தேர்வுக்கான முகாம் வருகிற 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் அறிவியல் பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

திருமணமாகாத இளைஞர்கள் 27.6.1999 முதல் 27.6.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணமான இளைஞர்கள் 27.6.1999 முதல் 27.6.2002-க்குள் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 152.5 செ.மீ. உயரம் உடையவராக இருத்தல் வேண்டும்.

தகுதியுடைய இளைஞர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு :www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை வேலை நாள்களில் நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story