அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
x

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ஐ.டி.ஐ.), அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்புபவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

இதற்கான கல்வி தகுதி 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.50 விண்ணப்ப கட்டணம். சேர்க்கை கட்டணம், ஒரு வருட தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185-ம், 2 வருட தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195-ம் வசூலிக்கப்படும். சேர்க்கையின்போது 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்-3 ஆகியவை எடுத்து வர வேண்டும். இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை gitiperambalur@gmail.com, 9499055881, 9499055852, ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை gitialathurperambalur@gmail.com, 9499055881, குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை gitikunnam@gmail.com, 9047949366, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை gitialathurperambalur@gmail.com, 9488451405 ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலும், செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை prlgitiariyalur@gmail.com, 9499055877, 04329-228408, ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை prlgitiandimadam@gmail.com, 9499055879 ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலும், தொலைபேசி, செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம், என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்), ஆனி மேரி ஸ்வர்ணா (அரியலூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story