முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி நாளாகும்.
விளையாட்டு போட்டிகள்
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டம் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண்-பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. இவற்றில் பங்கேற்க www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவு செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் வருகிற 17-ந்தேதி ஆகும். எனவே மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உடனடியாக தங்களது பெயர்களை இணையதளத்தில் பதிவுசெய்திட வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே இப்போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள்.
பல பயன்கள் உள்ளது
தேவையான தங்களது ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு வருகை தர வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். எனவே பதிவுகள் மேற்கொள்ளாமல் விட்டு விடாதீர்கள். இப்போட்டியில் வெற்றி பெற்றால் இதன் மூலம் பல பயன்கள் உள்ளது.
எனவே தனி நபர் மற்றும் குழு விளையாட்டு வீரர்கள் அனைத்து விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 7401703493 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.