திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிற்சாலை ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான இது மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவர்கள் அல்லாத அரசு ஊழியர்கள், விஞ்ஞானிகள் இவ்விருத்துக்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பங்கள் மற்றும் மேலும் தகவலுக்கு www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரிடம் வருகிற 15.9.2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விருதுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.