பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதியானவர்கள் பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம்
சமூக நீதிக்காக பாடுபவர்களுக்கு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செய்த பணிகள் மற்றும் சாதனைகள் செய்தவர்கள் தங்களது விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் கலெக்டருக்கு அனுப்பலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story