மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்


மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்
x

மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

செங்கம்

மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கம் தாலுகா தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மானாவரி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பண்ணையம் செய்திட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவசாயிகள், பெண் விவசாயிகள், பட்டியல் இன மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 2½ ஏக்கர் நிலமும் அதில் மரவள்ளி முதன்மை பயிராகவும், ஊடு பயிர் வகைகளும் மற்றும் தீவனப்பயிர்களும் பயிரிட வேண்டும். 1 மாடு, 5 ஆடுகள் வாங்க வேண்டும், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் செய்திட வேண்டும். இதற்கான தொகை மானியமாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story