சிறப்பு காவலர் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்


சிறப்பு காவலர் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x

சிறப்பு காவலர் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் ென போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு கோவில் காவலர் பாதுகாப்பு பணிக்கு 24 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்கனை நிரப்புவதற்கு விருப்பமுள்ள 62 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. ஓய்வு பெற்ற காவலர்கள் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் துணை இயக்குனர், முன்னாள் படைகலன், வேலூர், வழியாகவும் மனுக்களை வருகிற 27-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கிடைக்கும்படியாக அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story