கல் உடைக்கும் குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்


கல் உடைக்கும் குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
x

கல்குவாரிகளில் கல் உடைக்கும் குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள 31 சாதாரண கல்குவாரிகளில் இருந்து சாதாரண கல் உடைக்க குத்தகை உரிமம் பெற முன்னுரிமை அடிப்படையில் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கங்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின் விதி 8-ன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கண்ட கல் குவாரிகளிலிருந்து கட்டுமானப் பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் சாதாரண கட்டுக்கல், சக்கை கல், வேலிகல், ஜல்லி ஆகியவற்றை குவாரி செய்வதற்காக குத்தகை உரிமம் பெற விருப்பம் உள்ள உரிய அங்கீகாரம் பெற்ற பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றுக்கு குத்தகை உரிமம் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் இணைப்பு 6-பி-யில் கண்டுள்ளவாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.21-ல் உள்ள மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபாலிலோ நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பெரம்பலூர் ஆர்.டி.ஓ. மற்றும் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story