தற்காலிக பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தற்காலிக பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்
ராமநாதபுரம் மாவட்ட தூய்மை பாரத இயக்கம் ஊரக திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட மேலாண்மை மற்றும் தகவல் கல்வி தொடர்பு மையம் அமைத்திட 6 தற்காலிக பணியிடங்கள் அவுட் சோர்சிங் முறையில் நிரப்பப்பட உள்ளது. திடக்கழிவு மேலாண்மை நிபுணர் பணிக்கு 2 தற்காலிக பணியிடங்களும், திரவ கழிவு மேலாண்மை நிபுணர் பணிக்கு 1 தற்காலிக பணியிடமும் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடத்திற்கு சுற்றுச்சூழல், சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.35,000 வழங்கப்படும். திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் நிபுணர் 1 தற்காலிக பணியிடத்துக்கு பி.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ. பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதாந்திர ஊதியம் ரூ.35,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணிக்கு 2 தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மாஸ் கம்யூனிகேசன், மாஸ் மீடியா முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மாதாந்திர ஊதியம் ரூ.25,000 வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து. விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. வரும் 14-ந்தேதி மாலைக்குள் மேலாளர், மாவட்ட முகமை, மாநில ஊரக வாழ்வாதார திட்ட செயலாக்க அலகு (மகளிர் திட்டம்), கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம்-623504 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.