காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 3 July 2022 5:08 PM IST (Updated: 4 July 2022 8:45 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காலி பணியிடங்கள்

திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் குறித்து முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

6-ந் தேதி கடைசி நாள்

வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும்.

குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகம் deotvm@gmail.com என்ற முகவரிலும், செய்யாறு மாவட்ட கல்வி அலுவலகம் cheyyardeo@gmail.com என்ற முகவரிலும், ஆரணி மாவட்ட கல்வி அலுவலகம் deoarni2018@gmail.com என்ற முகவரிலும், போளூர் மாவட்ட கல்வி அலுவலகம் deopolur@gmail.com என்ற முகவரிலும், செங்கம் மாவட்ட கல்வி அலுலகம் deochengam@gmail.com என்ற முகவரிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story