இளையோர் மன்ற விருது பெற விண்ணப்பிக்கலாம்


இளையோர் மன்ற விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

இளையோர் மன்ற விருது பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா துணைஇயக்குனர் திருநீலகண்டன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுருப்பதாவது:- தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் மன்றங்களின் சேவைகளை பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் ஆண்டு தோறும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான இளையோர் மன்ற விருதுகள் வழங்கப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டு விருதினை பெற நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள இளைஞர், மகளிர் மன்றங்கள் மாநில சங்க சட்டத்திலும் பதிவு செய்திருக்கவேண்டும். கடந்த 2021 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2022 மார்ச் 31-ந்தேதிக்குள் தங்கள் பகுதிகளில் சேவை செய்ததற்கான நற்பணிகளை ஆதாரங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவிலான விருது போட்டிக்கு தகுதி பெறும். இதற்கான விண்ணப்பத்தை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, கணபதி நகரில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நேரில் அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பித்தினை வருகிற 15-ந்தேதிக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story