மதிப்பீட்டு போட்டித்தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
மதிப்பீட்டு போட்டித்தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி நடைபெறும் மத்திய அரசின் முதல்நிலை குடிமைப்பணி தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பத்தாரர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி நடைபெறும் ''நான் முதல்வன் யுபிஎஸ்சி ப்ரீலைம்ஸ் ஸ்காலர்ஷிப் தேர்வு 2023" எனப்படும் முன்னோடி மதிப்பீட்டு தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு ரூ.7,500 உதவித்தொகையாக 10 மாதங்களுக்கு குடிமைப்பணிகள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் 1000 விண்ணப்பதாரர்களில் முதல்முறை விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான குறைந்தபட்ச வயது 21 ஆகும். 1.8.2024 அன்று 22 வயதினை பூர்த்தி செய்யப்படாமல் இருக்க வேண்டும்.பிற விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) ஆகியோர்களுக்கு அதிகபட்சம் 37 வயதிற்கு மிகாமலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 42 வயதிற்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்ஆகியோர்களுக்கு 35 வயதிற்கு மிகாமலும், பொதுபிரிவினர் 32 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஓர் பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மதிப்பீட்டு போட்டித்தேர்வுக்கு பங்கேற்க விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இன்றைக்குள் (வியாழக்கிழமை) https://nmcep.tndge.org/apply-now என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்திய, மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் விண்ணப்பத்தாரர்கள் மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்றும், 26.5.2024 அன்று நடைபெற உள்ள மத்திய அரசின் குடிமைப்பணிகள் முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இந்த உதவித்தொகை பெற்றிட தகுதியில்லை என தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசின் குடிமைப்பணிகள் முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் இந்த தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.