ஊர்க்காவல் படை கமாண்டர் நியமனம்


ஊர்க்காவல் படை கமாண்டர் நியமனம்
x

திருப்பத்தூர் மாவட்ட ஊர்க்காவல் படை கமாண்டர் நியமனம் செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழக சிவில் பாதுகாப்பு ஊர்காவல் படை இயக்குனர் ரவி உத்தரவின்படி திருப்பத்தூர் மாவட்ட ஊர்க்காவல் படை கமாண்டராக வாணியம்பாடியை அடுத்த அளிஞ்சிகுளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், துணை கமாண்டராக சத்தியபாலாஜி ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து இருவருக்கும் பணி நியமன ஆணையை திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேற்று வழங்கினார்.

மேலும் பணிகளை சிறப்பாக செய்ய வாழ்த்துக்களை தெரிவித்தார்.


Next Story