மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு இடைக்கால நிர்வாகக்குழு நியமனம்
மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு இடைக்கால நிர்வாகக்குழு நியமனம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு 2ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த வாரம் நாகையில் இருந்து பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் புதிதாக துவக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு இடைக்கால நிர்வாகக் குழு நியமனம் செய்யப்பட்டது. அதற்கான நியமன ஆணையினை நிர்வாகக் குழு தலைவர் ஞானவேலனிடம் மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் வழங்கினார். அப்போது துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூட்டுறவு சார் பதிவாளர் குணபாலன் மற்றும் ஒன்றிய மேலாளர் (பொ) அமீருதீன் இருந்தனர்.
Related Tags :
Next Story