மதுரை மாவட்ட அரசு டவுன் காஜி நியமனம்
மதுரை மாவட்ட அரசு டவுன் காஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை
மதுரை மாவட்ட அரசு டவுன் காஜி பதவிக்கு பல வருடங்களாக ஆட்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த சபூர் முகைதீன் மிஸ்பாகி என்பவர் தமிழக கவர்னரின் ஒப்புதலின்படி மாவட்ட அரசு டவுன் காஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 வருடங்கள் ஆகும். இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட துறை செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் வெளியிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு டவுன்காஜி வரிச்சியூரில் உள்ள ஜே.எம்.எஸ். அரபிக்கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத், மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஜமாஅத்துல் உலமா சபை, இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு, மஜ்லிசுல் உலமா சபை, திருமங்கலம் அனைத்து முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.