தொலைத்தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் நியமனம்
தொலைத்தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினராக என்.டி.எஸ்.சார்லஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
தொலைத் தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர்களாக தனுஷ் எம்.குமார் எம்.பி. மற்றும் ஞான திரவியம் எம்.பி ஆகியோர் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பரிந்துரையின் பேரில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தைச் சேர்ந்த என்.டி.எஸ்.சார்லஸ், தற்போது தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இதற்குரிய உத்தரவை இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story