கலெக்டர் அலுவலக வரவேற்பு மையத்திற்கு ஊழியர்கள் நியமனம்


கலெக்டர் அலுவலக வரவேற்பு மையத்திற்கு ஊழியர்கள் நியமனம்
x

கலெக்டர் அலுவலக வரவேற்பு மையத்திற்கு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் 7 மாடிகளை கொண்டது. இங்கு பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அப்படி கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வழிகாட்டவும், எந்தெந்த அலுவலகம் எங்கு உள்ளது என்று தெரிந்து கொள்வதற்கு வசதியாக வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. புதிய கலெக்டர் அலுவலகம் திறந்து 4 மாதங்கள் ஆகியும் வரவேற்பு மையத்தில் ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தியின் புகார் பெட்டியில் செய்தி வெளியிபப்பட்டு இருந்தது.

அதன் எதிரொலியாக அந்த வரவேற்பு மையத்தில் 2 பெண் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு எந்த அலுவலகத்துக்கு செல்ல வேண்டும், யாரை பார்க்க வேண்டும், எந்த மாடிக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து வழிகாட்டினர். இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் தவித்தவர்களுக்கு நேற்று முதல் நிம்மதி கிடைத்தது. இதுகுறித்து புகார்பெட்டியில் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், அதனை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story