வேலை வாய்ப்பு முகாமில் 102 பேருக்கு பணி நியமன ஆணை


வேலை வாய்ப்பு முகாமில் 102 பேருக்கு பணி நியமன ஆணை
x

சோளிங்கரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 102 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

சோளிங்கரில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலை வாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க சோளிங்கர் வட்டார மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட இயக்குனர் நானிலதாசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

வேலை வாய்ப்பு முகாமில் 290-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 102 பேர் தேர்ரு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்குப்பட்டு ராமன், நதியா மதன்குமார், மாரிமுத்து, சுப்பிரமணி மற்றும் வட்டார இயக்க அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story