மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற வளாக தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்றார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிரபல முன்னணி நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்ற 242 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story