அரசு போக்குவரத்து கழகத்தில் குடியரசு தின விழா: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு


அரசு போக்குவரத்து கழகத்தில் குடியரசு தின விழா: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த 32 டிரைவர்கள், 30 கண்டக்டர்கள், 18 தொழில்நுட்ப பணியாளர்கள், 5 அலுவலக பணியாளர்கள், 4 மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒரு கிளை மேலாளர் என மொத்தம் 90 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதேபோல் பெண் பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் மனைவி, குழந்தைகளுக்கு கோலப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் தொழில்நுட்ப துணை மேலாளர் ராஜராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, பணியாளர் பிரிவு உதவி மேலாளர் புருஷோத்தமன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், அலுவலர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story