மாணவர்களுக்கு பாராட்டு
மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி புவி அமைப்பியல் துறை, எம்.ஆர். புவி அமைப்பியல் தீர்வுகள் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி புவி அமைப்பியல் தொடர்பான கருத்தரங்குகள், களப்பணி, பயிற்சி பட்டறைகள், சிறப்பு சொற்பொழிவுகள் ஆகிய பொருண்மைகளில் இணைந்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கடந்த 14-ந்தேதி முதல் 2 நாட்கள் நடைபெற்ற சுண்ணாம்பு பாறைகளின் புவி இயற்பியல் கூறுகள் குறித்த களப்பணியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் புவி அமைப்பியல் துறை மாணவர்கள் முகேஷ், சுந்தர் மற்றும் பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். களப்பணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு களப்பணி பயிற்சி மட்டுமல்லாமல் சான்றிதழ் மற்றும் களப்பணி படி தொகையும் வழங்கப்பட்டன. சான்றிதழ் பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி, புவி அமைப்பியல் துறை தலைவர் உதய கணேசன், எம்.ஆர். நிறுவன இயக்குனர் முகமதுரபிக் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.