2-வது இடம் பிடித்த தென்காசி அணிக்கு பாராட்டு விழா
மாநில கைப்பந்து போட்டியில் 2-வது இடம் பிடித்த தென்காசி அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
நாகர்கோவில் வக்கீல்கள் சங்கத்தின் 111-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வக்கீல்கள் சங்கங்களுக்கிடையே மாநில அளவில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் மாநில அளவில் 2-வது இடத்தை தென்காசி மாவட்ட வக்கீல் அணி பிடித்தது. இதையடுத்து அந்த அணிக்கு தென்காசி வக்கீல்கள் சங்கம் சார்பில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட வக்கீல்கள் கைப்பந்து அணியில் சிராஜ், சத்திய சங்கர், ரெங்கராஜன், தங்கதுரை, அருண்பாண்டியன், இசக்கி ராஜ், ஜெயசீலன் சிவகுமார், அருணாச்சலம், ராஜாராம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த பாராட்டு விழாவிற்கு கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனுராதா, கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரீஸ்வரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாஸ்கர், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அட்வகேட் அசோசியேசன் தலைவர் பாண்டியராஜ், பார் அசோசியேஷன் தலைவர் செல்லத்துரை பாண்டியன், முன்னாள் அரசு வக்கீல்கள் மாடசாமி பாண்டியன், சின்னத்துரை பாண்டியன், செந்தூர் பாண்டியன், வக்கீல்கள் ரகுமான் சாதத், முருகன், கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, ராமச்சந்திரன், முத்துக்குமாரசுவாமி, பிரமநாயகம், முருகன், சுப்பிரமணியன், எஸ்.முருகேசன், ஜோதி முருகன், முத்துகிருஷ்ணன், சசிகுமார், சண்முக மணிகண்டன், கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனா்.