கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிட்டி வக்கீல்கள் சங்க தலைவர் அருளுக்கு பாராட்டு விழா
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிட்டி வக்கீல்கள் சங்க தலைவர் அருளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி
சிட்டி வக்கீல்கள் சங்க தலைவரும், திருச்சி வக்கீல்கள் சங்க முன்னாள் துணைத் தலைவருமான வக்கீல் என்.அருள். இவருக்கு கனடா நாட்டின் பிராம்டன் பன்னாட்டு பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாக்டர் பட்டம் பெற்று திருச்சி திரும்பிய அருளுக்கு, திருச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். மேலும் மூத்த வக்கீல்கள் கங்கைசெல்வன், தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு அருளுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story