முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். உதவி பேராசிரியர் கணேஷ் அறிமுகவுரையாற்றினார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் லெப்டினன்ட் கர்னல் ஆ.சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆதித்தனார் கல்லூரி, தேசிய மாணவர் படை அதிகாரி சிவமுருகன் பன்னாட்டு இளைஞர் தினம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். பின்னர் 1965 மற்றும் 1971-ல் இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த முன்னாள் ராணுவ வீரர்களான அருணாசலம், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் புகைப்படத்திற்கு தமிழ்நாடு தனி கம்பெனி தேசிய மாணவர் படை (29) தூத்துக்குடி கிளை சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நாயக் சுபேதார் வரதராஜன், கம்பெனி ஹவில்தார் மேஜர் ரவி, ஹவில்தார்கள் சுரேஷ், முருகன், நரேந்திர சிங், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தேசிய மாணவர்படை அதிகாரி மணி மற்றும் டி.டி.டி.ஏ. பள்ளி தேசிய மாணவர்படை அதிகாரி ஐசக் கிருபாகரன் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், கல்லூரி பேராசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார்.