நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா


நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குருவிகுளத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தென்காசி

திருவேங்கடம்:

குருவிகுளம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகளில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. குலசேகரப்பேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பரமேஸ்வரி, சுவாமிநாதபுரம் ஞானசுந்தரி அம்பாள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, பழங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியை சுப்புரத்தினம், கொக்குகுளம் டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வேப்பங்குளம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அய்யம்மாள், சின்ன வாகைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை குமுதா ஆகியோருக்கு குருவிகுளம் வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரசேகர், சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



Next Story