ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ்


ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
x

ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ்

திருவாரூர்

ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த 4 பேருக்கு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் பாராட்டு சான்றிதழை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெற்று செல்கின்றனர். அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாமாறுதல், புதியகுடும்பஅட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 253 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கொடுத்தனர்.

பாராட்டு சான்றிதழ்

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு சக்கர நாற்காலியும், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த 4 பேருக்கு பரிசுடன் கூடிய பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சித்ரா, தனிதுணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story