புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்றுத்தொழிலை தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்


புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்றுத்தொழிலை தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
x

புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில், சுகாதார நலப்பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான 'ரேப்பிட் இமுனிசேசன் ஸ்கில் என்கேன்ஸ்மென்ட்' செயலியை தொடங்கி வைத்தார்.

பின்னர், புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கும், பீடி சுருட்டும் தொழிலை கைவிட்டு மாற்றுத்தொழில் தேர்ந்தெடுத்த தொழிலாளர்களுக்கும் அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

சிறிய குறைபாடுகள்

3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட தேவைகளை விளக்கிக்கூறி, இப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச உள்ளோம்.

அதன் பிறகு மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்த சோனாவாலை சந்தித்து, திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறிய குறைபாடுகளுக்கு எல்லாம் அங்கீகாரம் ரத்து போன்றவை ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story