வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 பேருக்கு பாராட்டு சான்றிதழ்


வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வாக்காளர் பட்டியல்

இந்தியதேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 1-ந் தேதி தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. வாக்களர்கள், நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் என்.வி.எஸ்.பி என்ற இணையதளத்திலும், "வோட்டர் ஹெல்ப்லைன் "என்ற செயலி மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம்-6பி பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு வரும் போது, படிவம்- 6பி பூர்த்தி செய்து ஆதார் அட்டைநகல் மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களை அவர்களிடம் வழங்க வேண்டும்.

சான்றிதழ்

படிவம்-6பி மூலம் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் போது சரிபார்ப்பு வசதிக்காக வாக்காளருக்கு ஒன்பது இலக்க எண் வழங்கப்படும். மேற்கண்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எண்ணை இந்திய தேர்தல் ஆணையத்தின் https://www.elections.tn.gov.in/getcertificate என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்யவேண்டும். பதிவு செய்தவுடன் வாக்காளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ஓ.டி.பி. எண்ணை சமர்ப்பித்தபின் இ-சர்டிபிகேட் எனும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் முதல் 1000 வாக்காளர்களுக்கு இ-சர்டிபிகேட் வழங்கப்படுகிறது. தூத்துக்குடிமாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் முதல் 1000 வாக்காளர்கள் மேற்கண்ட சான்றிதழை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story