குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
x

குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி

பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் முனாப், கட்டிமேடு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி தேன்மொழி, கல்வி புரவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயி்ற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பாராட்டினர்.

Next Story