கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த 25 செவிலியர்களுக்கு பாராட்டு


கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த 25 செவிலியர்களுக்கு பாராட்டு
x

கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த 25 செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் நீலகிரி மண்டல மையம் உறுப்பு கல்லூரி சார்பில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார். செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பேராசிரியர் அம்பேத் ஆகியோர் பேசினர். தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த 25 செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் ஆலோசகர் ஜெபராஜ் நன்றி கூறினார்.


Next Story