அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வில் 107 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் அதிக அளவாக வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு எஸ்.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து 17 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தமிழக அரசால் வழங்கப்படும். திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் வேதரெத்தினம், பொருளாளர் சண்முகம், தலைமைஆசிரியர் தொல்காப்பியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story