அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
x

சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்களை பாராட்டினர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

விருதுநகர் மாவட்ட அளவில் கலைவிழா விருதுநகரில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கலந்துகொண்ட 6-ம் வகுப்பு மாணவி காவியா பாட்டு போட்டியில் முதல் பரிசு பெற்றார். 7-ம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன் வயலின், இசைகருவி வாசித்தல் போட்டியில் 2-வது பரிசு பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் கேடயமும் பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டி ஆலங்குளம் அரசினர் மேல்நிலைபள்ளியில் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) பரமசிவன் தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் முத்துராஜ் மற்றும் ஆசிரியர்கள் டொமினிக், காளிராஜ், கிருஷ்ணசாமி ஆகியோர் பரிசு பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டினர்.


Next Story