ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு


ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 11 March 2023 2:30 AM IST (Updated: 11 March 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற வடமதுரை கலைமகள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல்

கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில், வடமதுரை கலைமகள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்தில் அதிக அளவான கலைமகள் பள்ளியை சேர்ந்த 30 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 9-ம் வகுப்பு மாணவி நாகசன்மதி மாவட்ட அளவில் முதலிடமும், மகாலட்சுமி, மனோஜ் 2-ம் இடமும், சரண்யா, சந்தோஷ் 3-ம் இடமும் பிடித்து தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் பெருமாள், இணை இயக்குனர் சுப்பம்மாள், தலைமை ஆசிரியர் ராமு ஆகியோர் பாராட்டினர்.


Next Story