திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு


திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு
x

கோவில்பட்டியில் திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்த மாணவர் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி எம்.எம். வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழாவும், ஒரே நிமிடத்தில் 50 திருக்குறள்களை ஒப்புவித்து உலக சாதனை புரிந்த 8-ம் வகுப்பு மாணவர் பிரசாத்துக்கு பாராட்டு விழாவும் நடந்தது. பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜசேகர், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்த மாணவர் பிரசாத்துக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாணவர்களின் தமிழ் கவிதைகள், தமிழ் மொழியின் தொன்மை, மேன்மை குறித்த உரையாடல்கள். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


Next Story