செஞ்சி சாரதா பள்ளியில் பாராட்டு விழா


செஞ்சி சாரதா பள்ளியில் பாராட்டு விழா
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு செஞ்சி சாரதா பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சியில் வசித்து வருபவர் ஆசிரியர் ஜெகதீஷ். இவரது மனைவி மாலாவும் ஆசிரியை ஆவார். மேல்மலையனூரை பூர்வீகமாக கொண்டவர்கள். இந்த தம்பதியரின் மகன் பிரபஞ்சன். இவர் சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இந்த மாணவர், செஞ்சியில் உள்ள சாரதா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை படித்திருந்தார். எனவே இப்பள்ளியில் மாணவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கி பேசுகையில், நமது பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர் பிரபஞ்சன், நீட் தேர்வில் முதலிடம் பிடித்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இது நமது பள்ளிக்கும் பெருமை. இதற்காக அவர் கடுமையாக உழைத்திருப்பார். இந்த மாணவரை போல் மற்ற மாணவர்களும் நன்றாக படித்து சாதிக்க வேண்டும் என்றார்.

விழாவில் மாணவரும், பெற்றோரும் பாராட்டப்பட்டனர். மாணவர் பிரபஞ்சனுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. முதல்வர் சிவசங்கரி வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை நிர்வாக அலுவலர் அருள், மாணவரின் பெற்றோர் ஜெகதீஷ்-மாலா, ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் சாரதா பிரைமரி பள்ளி முதல்வர் உஷா நன்றி கூறினார்.


Next Story