சாதனை படைத்த கராத்தே மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு
சாதனை படைத்த கராத்தே மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை
சென்னையில் நடைபெற்ற நோபல் உலக கராத்தே சாதனை போட்டியில் சோளிங்கர் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மற்றும் ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சி பள்ளி மாணவ- மாணவிகள் 29 பேர் கலந்து கொண்டு 30 நிமிடத்தில் 1000 கிக் செய்து உலக சாதனை செய்தனர். கராத்தேயில் நோபல் உலக சாதனை செய்த மாணவ- மாணவிகள் மற்றும் மாஸ்டர்களுக்கு உலக சாதனைக்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம், சோளிங்கர் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோரை நேரில் சந்தித்து நோபல் உலக சாதனையில் வென்ற பதக்கம், சான்றிதழை காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.
சோளிங்கர் நகராட்சி துணைத் தலைவர் பழனி, சோளிங்கர் தலைமை கராத்தே பயிற்சியாளர் கார்த்தி மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story