பள்ளி குழந்தைகளுக்கு திறனறி தேர்வு
நெல்லையில் பள்ளி குழந்தைகளுக்கு திறனறி தேர்வு நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை காந்திநகர் லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளியில் நேற்று குழந்தைகளுக்கு திறனறி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நெல்லையின் பல பகுதிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஆண்டனி பாபு, பள்ளி முதல்வர் ஜோஸ்பின் விமலா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் தேர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார். தீபா செல்வகுமார் மாணவர்களை வாழ்த்தி பேசினார். விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story