மீன் வளர்ப்போர் மேம்பாடு முகமை கூட்டம்
மீன் வளர்ப்போர் மேம்பாடு முகமை கூட்டம் நடந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்ய முதல் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் ஆகியோர்களுடன் மாவட்டத்தில் மீன் வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், பயனாளிகளை தேர்வு செய்து திட்டங்களை விரைந்து முடிக்க கலெக்டர் அம்ரித் மீன்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர சுகந்தி பரிமளம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்திய ராஜா, வேளாண்மை இணை இயக்குனர் (கோவை) த.முத்துலட்சுமி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் தில்லைராஜன் (பவானி சாகர் மண்டலம்), பவானி சாகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருளழகன், உதவி இயக்குனர் (ஊட்டி) ஜோதி லட்சுமணன், மீன்வள ஆய்வாளர் பத்மஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.