அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா
கடையநல்லூரில் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் மெயின் பஜாரில் அமைந்துள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடத்தப்படும் ஜாமிஆ அன் நஜாஹ் அரபிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி போதிக்கப்படுகிறது. இதற்கான ஆண்டு விழா மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மஸ்ஜித் முபாரக் கமிட்டித் தலைவர் க.அ.சேகு துமான் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் பஷீர் அஹ்மத் உமரி தொகுத்து வழங்கினார். மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி செயலாளர் முஹம்மது காசிம் சின்சா, பேராசிரியர்கள் ஜபருல்லாஹ் பத்ரி, முஹிபுல்லாஹ், மற்றும் ஆசிரியைகள் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் முஹம்மது கோரி வரவேற்றார். முதலாவதாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 40 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ்.எஸ்.யூ.சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்களுக்கு மத்தியில் இஸ்லாம் குறித்து நடைபெற்ற போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நிர்வாக கமிட்டி.உறுப்பினர்கள், அப்துல் மஜீத், கஸ்ஸாலி முஹம்மது கோரி, முஹம்மது யஹ்யா, ரபீக் அஹ்மத் மற்றும் உறுப்பினர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.