ஆரணி எஸ்.எஸ்.எஸ். மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான பேச்சுப்போட்டி


ஆரணி எஸ்.எஸ்.எஸ். மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி எஸ்.எஸ்.எஸ். மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது.

ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் ஆகாரம் அருகே அமைந்துள்ள ஆரணி எஸ்.எஸ்.எஸ். மகளிர் கல்லூரியில் அறிவியல் சங்கம் சார்பாக பன்னாட்டு கருத்தரங்கம், தேசிய அளவிலான பேச்சுப்போட்டி கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.லட்சுமி தலைமையில் நடைபெற்றது. வணிக நிர்வாகவியல் துறை தலைவர் கே.வி.சிவகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கல்லூரி தலைவர் ஏ.கே.நடராஜன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை ஊக்கப்படுத்தி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

போட்டியில் 28 மாணவிகள் கலந்து கொண்டனர் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.யாழினிக்கு ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பெற்ற மாணவி எஸ்.ஈஸ்வரிக்கு ரூ.2ஆயிரம், 3-ம் இடம் பெற்ற மாணவி எஸ்.திவ்யாவுக்கு ரூ.1000-மும் பரிசு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறை தலைவர் எஸ்.பார்த்திபன் நன்றி கூறினார்.


Next Story