அறந்தாங்கி லாரல் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்


அறந்தாங்கி லாரல் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்
x

அறந்தாங்கி லாரல் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே குரும்பக்காடு பகுதியில் லாரல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரைக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி தாளாளர் டாக்டர் கே.பாலசஞ்சீவி தலைமையில், மிகச்சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த மாணவி மதுமிதா 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஆங்கிலத்தில் 97, தமிழில் 98, வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு பள்ளியின் சார்பாக பாராட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவி மதுமிதா ஆகியோர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளாவையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ஆண்டனி லாரல் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து வாழ்த்து தெரிவித்தார். இதேேபால் பள்ளி தாளாளர் டாக்டர் பாலசஞ்சீவி, லாரல் கல்வி இயக்குனர் பா.சஹானா, தலைமை ஆசிரியர் பி.கோவிந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் லாரல் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்ற மாணவ-மாணவிகளும், சாதனை படைத்த மாணவி மதுமிதாவை பாராட்டி இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.


Next Story