அரசூர் பூச்சிக்காடு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


அரசூர் பூச்சிக்காடு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x

அரசூர் பூச்சிக்காடு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே அமைந்துள்ள அரசூர் பூச்சிக்காடு முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 14-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. விழா நாட்களில் துர்க்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள், வேதிகார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேற்று காலை 4-ம் கால யாகசாலை, யாத்ரா தானம், கடம் புறப்பாட்டை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து கணபதி, பெருமாள், முத்தாரம்மன், உஜ்ஜையினி மாகாளி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரினம் செய்தனர்.


Next Story