கள்ளக்காதலி வீட்டில் கட்டிட மேஸ்திரி பிணம்
அஞ்செட்டி அருகே கள்ளக்காதலி வீட்டில் கட்டிட மேஸ்திரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே கள்ளக்காதலி வீட்டில் கட்டிட மேஸ்திரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட மேஸ்திரி
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா பேடரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், தக்கட்டியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மாதேசும், அந்த பெண்ணின் உறவினர் பாலுவும் நண்பர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் கடந்த 14-ந் தேதி மது அருந்தி உள்ளனர்.
பின்னர் மது போதையில் மாதேஷ் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் அங்கேயே தூங்கி விட்டார். நேற்று முன்தினம் காலை அவர் வாயில்நுரை தள்ளிய நிலையில் மர்மமான முறையில் கள்ளக்காதலி வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொலையா?
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாதேசின் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஷ் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.